லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் மக்தபில் பரிசளிப்பு நிகழ்வு
அல்லாஹ்வின் பேரருளால்
6-3-2024 புதன்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் மக்தபில் பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது
மஸ்ஜித் முத்தவல்லி JMA அரபுக் கல்லூரி தலைவர்
AMF. முஹம்மது சாதிக் அவர்கள் தலைமை தாங்கினார்
அல்ஹாஜ் S. ஜாபர் அலி,
லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் இமாம்
மவ்லவி ஹாஃபிழ் K.முஹம்மது நூருல்லாஹ் ஹள்ரத்
JMA அரபுக் கல்லூரி பேராசிரியர் மவ்லவி A.R. ஸலாஹுத்தீன் மன்பயீ
மக்தப் ஆசிரியர்கள் மவ்லவி முஹம்மது சித்திக் மன்பயீ
மவ்லவி, ஹாபிழ் M. இன்ஆமுல்லாஹ் மன்பயீ
ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கடந்த மாதம் தவறாமல் தொழுகைக்கு வந்தவர்கள்
விடுமுறை எடுக்காமல் மக்தப் வந்தவர்கள்,
மாணவர்களின் அன்றாட செயல்பாடுகளை கண்காணிப்பு அட்டையை சரியான முறையில் பயன் படுத்திய மாணவர்கள்
நடப்பு மாதம் நடைபெற்ற தீனியாத் பொதுத் தேர்வில் முதல் தரத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஆகியோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
சிறப்பான முறையில் மக்தப் மதரஸாவை நடத்தி வரும் மக்தப் ஆசிரியர்கள் மவ்லவி முஹம்மது சித்திக் மன்பயீ
மவ்லவி, ஹாபிழ் M. இன்ஆமுல்லாஹ் மன்பயீ ஆகிய இருவரையும் லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி அவர்கள் பாராட்டி பொன்னாடை போர்த்தினார்
இறையச்சம் உள்ள ஒழுக்கமான மாணவர்களை உருவாக்குவதே நமது நோக்கமாகும்.
அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன்
.
Tags: லால்பேட்டை