லால்பேட்டையில் நடைபெற்ற துபாய் லால்பேட்டை ஜமாஅத் 36-வது ஆண்டின் சிறப்பு மலர் அறிமுக விழா..!
உலக வர்த்தக மாநகர் துபாயில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட துபாய் லால்பேட்டை ஜமாஅத் 36-வது ஆண்டின் சிறப்பு மலர் அறிமுக விழா லால்பேட்டை முபாரக் ஷரீப் மஹாலில் 20/04/2024 சனிக் கிழமை காலை சிறப்புடன் நடைபெற்றது.
லால்பேட்டை துபாய் ஜமாஅத் செயலாளரும், மலர்க் குழு தலைவருமான Z.பையாஜ் அஹமது தலைமை வகித்தார்.
முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் மௌலவி பஷீர் அஹமது மன்பஈ கிராஅத் ஓதினார்.
துபாய் ஜமாஅத் துணைத் தலைவர் மெளலவி ஏ.ஆர்.ரியாஜுல்லாஹ் வரவேற்புயாற்றினார்.
ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி முதல்வர் மெளலானா ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் மலரை வெளியிட, லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஏ.எம்.எஃப். முஹம்மது சாதிக்,செயலாளர் ஹாஜி கே.ஏ.அமானுல்லாஹ்,லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.ஏ.முஹம்மது ஹாரிஸ், துணைத் தலைவர் ஜெ.அன்வர் சதாத், அபுதாபி, சவூதி அரேபியா, கத்தார் லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
ஜாமிஆவின் துணை முதல்வர் எஸ்.ஏ.சைபுல்லாஹ் ஹஜ்ரத்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி,கவிஞர் ஏ.எம்.முஹிப்புல்லாஹ், எம்.நஜிபுல்லாஹ், கவிஞர் பி.எம்.நஜீர் அஹமது, அமீரக காங்கிரஸ் தலைவர். அப்துல் மாலிக், துபாய் ஜமாஅத் முன்னாள் தலைவர்கள் எஸ்.எம்.அனீசுர் ரஹ்மான்,எஸ்.எம்.அப்துல் வாஜிது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி மலர் அறிமுக உரையாற்றினார்.
விழாக் குழு செயலாளர் ஹாஜா மைதீன் தொகுத்து வழங்க, துணைச் செயலாளர் குத்ரத்துல்லாஹ் நன்றி கூறினார். நிகழ்வை லால்பேட்டை துபாய் ஜமாஅத் நிர்வாகிகள் முஹம்மது மைதீன்,கிஃபாயத்துல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
Tags: லால்பேட்டை