Breaking News

லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நடத்திய தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

நிர்வாகி
0

 



சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் விசிக தலைவர் திரு தொல் திருமாவளவன் அவர்களை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 14/04/2024 ஞாயிற்று கிழமை அன்று மாலை லால்பேட்டை லால்கான் தோப்பு மைதானத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது தலைமை வகித்தார். 


நகர பிரமுகர் ஹாபிழ் முஜிபுர் ரஹ்மான் கிராத் ஓதினார்.


நகர செயலாளர் ஏ.முஹம்மது தையூப் முஹிப்பி வரவேற்புரையாற்றினார்.


கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.முஹம்மது ஜெக்கரியா, செயலாளர் ஏ.சுக்கூர், பொருளாளர் ஷஹாபுதீன், மாவட்ட துணை செயலாளர் பி.எம்.ஜே.மசூத் அஹமது, துணை தலைவர் எஸ்.எம். அனீசுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான திரு செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிரணி தேசிய தலைவர் ஏ.எஸ். பாத்திமா முஸப்பர், மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் பொறுப்பாளர் விடுதலை செழியன், திமுக நகர செயலாளரும், பேரூராட்சி மன்ற துணை தலைவருமான ஜெ.அன்வர் சதாத், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவரும், பேரூராட்சி மன்ற தலைவருமான ஏ.முஹம்மது ஹாரிஸ் ஆகியோர் திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய கோரி உரையாற்றினர். 


லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஏ.எம்.எஃப்.முஹம்மது சாதிக், செயலாளர் கே.ஏ.அமானுல்லா, இந்திய தேசிய லீக் மாநில துணை தலைவர் ஜெ. அப்துல் ஹமீது, மனித நேய மக்கள் கட்சி லால்பேட்டை நகர தலைவர் டி.ஏ. ஜாபர் அலி, இந்திய தேசிய லீக் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.நவ்வர் ஹுசைன், மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஏ.அப்துல் சமது, மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஓ.ஆர்.ஜாக்கிர் ஹுசைன், நகர செயலாளர் முஹம்மது யூனுஸ், அமீரக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அப்துல் மாலிக், லால்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஓ.ஓய்.ஹிதாயத்துல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முஸப்பர் அஹமது, கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் மவ்லானா அப்துல் ரஜாக் உலவி, செயலாளர் முஹம்மது இஸ்மாயில், பொருளாளர் கஜ்ஜாலி, பண்ருட்டி நகர தலைவர் அப்துல் மாலிக், மகளிரணி சென்னை மண்டல அமைப்பாளர் ஜெய்தூன், சென்னை மேற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஷாஹிபா நாச்சியார், ஐடி விங் பொறுப்பாளர் ஸ்மார்ட் ஜாபர், மாநில பொதுக்குழு உறுப்பினர் கடலூர் ஆரிப், மாவட்ட துணை தலைவர் முஹம்மது ஹாரிஸ், சிதம்பரம் நகர தலைவர் அன்வர் அலி, மாவட்ட ஐ டி விங் செயலாளர் இம்தியாஜ், 

மற்றும் லால்பேட்டை அனைத்து மஸ்ஜித் முத்தவல்லிகள், ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி நிர்வாக குழுவினர், லால்பேட்டை, சிதம்பரம், கொள்ளுமேடு, மானியம் ஆடூர், ஆயங்குடி, காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட சுற்றுவட்டார ஜமாத்தார்கள், திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக், மனித நேய ஜனநாயக கட்சி, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தை கட்சி  உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


நகர பொருளாளர் எம்.ஹெச். முஹிப்புல்லா நன்றி கூறினார்.


ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் பெருந்திரளாக பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகரை சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், நகர கௌரவ ஆலோசகர்கள், துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள், வெளிநாடு காயிதே மில்லத் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.


லால்பேட்டை எக்ஸ்பிரஸ் யூடியூப் வழி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேரலை செய்யப்பட்டது.


பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இம்மாபெரும் பொதுக்கூட்டத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகர நிர்வாகிகள் மூன்றே தினங்களில் முனைப்போடு செயல்பட்டு சரித்திரம் படைத்துள்ளனர்.


சிறப்புமிக்க இப்பொதுக் கூட்டம் வெற்றி பெற துணை நின்ற அனைவருக்கும் இதயமார்ந்த நன்றிகள்.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு.செல்வப்பெருந்தகை அவர்களை இக்கூடத்தில் பங்கேற்க காரணமாக இருந்தத அமீரக தொழில் அதிபர் ஆயங்குடி அப்துல் மாலிக் அவர்களுக்கும் அன்பின் நன்றி.
















Tags: லால்பேட்டை

Share this