அபுதாபியில் லைலத்துல் கத்ர் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு..!
*அபுதாபியில் ஒரு தமிழகம்*
இறைவனின் மாபெரும் அருளால் 05-04-2024 வெள்ளிக்கிழமை இரவு
அபுதாபி வாழ் தமிழ் இஸ்லாமிய சமூகத்தினர் ஒன்று கூடும் மாபெரும் லைலத்துல் கத்ர் இரவு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு
அழைப்பாளர்களாக அமீரகத்தை பூர்வீகமாக கொண்டவர்களும்
கலந்து கொண்டார்கள்.
அபுதாபில் இயங்கும் அய்மான் சங்கம்,
லால்பேட்டை ஜமாஅத், அபுதாபி மௌலித் கமிட்டி, அபுதாபி ஜமாஅத்துல் உலமா பேரவை, மர்ஹபா சமூக நலப் பேரவை, காயல் நல மன்றம் உட்பட பல சமூக அமைப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அபுதாபியில் இயங்கி வரும் பனியாஸ் பில்டிங் மெட்டீரியில் குழுமத்தின் தலைவர் நாகூர் அப்துல் ஹமீத் மரைக்காயர் மற்றும் நோபல் குழுமத்தின் இயக்குனர் தொழில் அதிபர் M.ஸாஹுல் ஹமீது அவர்களின் தலைமையில் "லைலத்துல் கத்ர் கமிட்டி" என்ற அமைப்பை உருவாக்கி
அதன் கீழ் பல வருடங்களாக லைலத்துல் கத்ர் இரவை சிறப்பான முறையில் இறையருளால் கொண்டாடப்பட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
அதன் அடிப்படையில் இந்த வருடமும் 05-04-2024 வெள்ளிக்கிழமை இரவு அபுதாபி
இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் லைலத்துல் கத்ர் மாபெரும் ஒன்று கூடல் நோபல் குழுமத்தின்
நிறுவனர் தொழில் அதிபர் M.ஸாஹுல் ஹமீது அவர்கள் தலைமையில்,
அபுதாபியின் அதீப் குழுமம் (ADEEB Group), பனியாஸ் பில்டிங் மெட்டீரியல் பிற நிறுவனங்களும்
இணைந்து மிகச் சிறப்பான முறையில் நிகழ்ந்தது.
துவக்கமாக 08:30 மணிக்கு இஷா தொழுகையோடு தொடர்ந்து தராவிஹ் 20 ரகாஅத் தொழுகையும்
நடந்தது. அதன் தொடர்ச்சியாக தஸ்பீஹ் தொழுகையும் நடந்தது. நிகழ்வின் சிறப்பான
அமர்வாக தமிழகத்திலிருந்து வருகை தந்த சேலம் நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின்
பேராசிரியப் பெருந்தகை சொல்முரசு மெளலவி அல்ஹாஜ்
அப்ஜலுல் உலமா. M. முஹம்மது அபுதாஹிர் (பாகவி) பாஜில் தேவ்பந்த் அவர்களின்
சிறப்பு பயான்கள் நடந்தது.
கூடுதலாக இவர்கள் கடந்த பத்து தினங்களாக ரமளான் பிறை 17-ஆம் பத்ரியீன்கள் தினத்திலிருந்து
"லைலத்துல் கத்ர்" கமிட்டியினரால் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் ஏற்பாடு
செய்ய்பட்ட தொடர் பயான் நிகழ்வில் தன்னுடைய சிறப்பான நாவன்மையால், சொல்லாற்றலால்
பல்வேறு தலைப்புகளில் பலரும் மனமுருகும் வண்ணம் சிறப்பான உரையினை தந்தார்கள்.
இதில் தமிழகத்தின் பல ஊர்களைச் சார்ந்தவர்கள் திரளான முறையில் கலந்து கொண்டு
பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
லைலத்துல் கத்ர் இரவு நிகழ்வில் ஹஸ்ரத் அவர்களின் சிறப்பு பயானிற்கு பிறகு
அபுதாபி ஜமாஅத் உலமா தலைவர் காயல்பட்டிணம் மௌவி S.M.B.ஹூஸைன் மக்கி மஹ்ழரி
அவர்களின் தவ்பா துஆ என்னும் பாவ மன்னிப்பு பிராத்தனை 30 நிமிடம் நிகழ்ந்தது.
இதில் உலக அமைதிக்காக வேண்டியும், உலக மாந்தர்கள் அனைவருக் இன்புற்றிருக்க
சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வின் இறுதியாக பெருமானார்(ஸல்) அவர்களின் மீது அருள் இறங்கும்
ஸலவாத்தோடு நிகழ்ச்சிகள் இறையருளால் நிறைவடைந்தது.
சங்கையான லைலத்துல் கத்ர் இரவு நிகழ்வில் *அபுதாபியில் ஒரு தமிழகமா*
என்று வியக்கும் வண்ணம் தமிழ் இஸ்லாமியர்கள் 1500-க்கும் மேற்பட்ட
எண்ணிக்கையில் பெருந்திரளாக குடும்பம், குடும்பமாக ஒன்று கூடி தாயகத்தில்,
சொந்த ஊரில் இருப்பது போல் மகிழ்ந்து கலைந்து சென்றார்கள்.
தொலை தூரத்திலிருந்து வருகை தந்த தொழிலாளர்களுக்கு அபுதாபியின் பல
பகுதிகளில் வாகன வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் அதன்
நிர்வாகிகளின் வழிகாட்டுதலோடு பிற அமைப்புகளும் இணைந்து ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் செய்திருந்தார்கள்.
Tags: உலக செய்திகள்