லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் கே.நவாஸ் கனி எம்.பி. அவர்களுக்கு வரவேற்பு!
லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் கே.நவாஸ் கனி எம்.பி. அவர்களுக்கு வரவேற்பு!
இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டாம் முறையாக மகத்தான வெற்றி பெற்று 25/08/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு லால்பேட்டை நகருக்கு வருகை தந்த,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் கே. நவாஸ் கனி எம்.பி., சமீபத்தில் மணவிழா கண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகரத் தலைவர் எஸ்.எம். அப்துல் வாஜிது புதல்வர் ஏ.டபிள்யூ. முஹம்மது ஹிசாமை நேரில் வாழ்த்தினார்.
எஸ்.எம். அப்துல் வாஜிது இல்லத்திற்கு வருகை தந்த கே. நவாஸ் கனி எம்.பி. அவர்களுக்கு லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஏ.எம்.எஃப். முஹம்மது சாதிக், எஸ்.எம். முஹம்மது மஃரூப், அபுதாபி அல்மனாக் நிறுவன பங்குதாரர் எம். ஜாசிம் நூர், இந்திய தேசிய லீக் மாவட்ட தலைவர் நவ்வர் ஹுசைன், துபை தொழில் அதிபர் ஷக்கீல் அஹ்மது ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.
முன்னதாக நகர முஸ்லிம் லீக் அலுவலகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஜே. மஸ்ஹுத் அஹ்மத், நகர துணைத் தலைவர் மவ்லவி எம். முஹம்மது அய்யூப் மன்பஈ ஆகியோர் நகர முஸ்லிம் லீக் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இந்நிகழ்வுகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி, மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம். அனீசுர் ரஹ்மான், நகர செயலாளர் ஏ. முஹம்மது தைய்யூப் முஹிப்பி, இளைஞரணி மாநில அமைப்புக்குழு உறுப்பினர் ஏ.எஸ். அஹ்மத், தலைமை நிலைய பேச்சாளர் யூ. சல்மான் பாரிஸ், மாவட்ட இளைஞரணி பொருளாளர் எம். முஹம்மது முபாரக், நகர கௌரவ ஆலோசகர் மவ்லவி ஏ. முஹம்மது மன்பஈ, நகர துணைத் தலைவர் எம். முஹம்மது சித்தீக், இளைஞரணி நகரத் தலைவர் ஏ. ஹாமீம் ஃபைஜி, அமீரக காயிதே மில்லத் எஸ்.ஏ. அஸ்கர் அலி, மாணவரணி நகரத் தலைவர் எம். முஸாஹிர், தஸ்லிம், நிஜாம், இம்ரான், அமீர், நகர முஸ்லிம் லீக் பிரமுகர்கள் கே.ஏ. முஹம்மது ஹாஜா, எம்.எம். உஜைர் அஹ்மது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags: லால்பேட்டை