Breaking News

சிதம்பரத்தில் இதய வேந்தர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் பிறந்த நாள்..!

நிர்வாகி
0

 அகிலத்தின் அருட்கொடை இதய வேந்தர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிதம்பரம் நகர செயலாளர் கவிஞர் மஹபூப் ஹுசைன் ஜவகர் ஒருங்கிணைப்பில்,

 

சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளுக்கு பிரட் மற்றும் பழங்கள், மகப்பேறு பிரிவில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.


தொடர்ந்து சிதம்பரம் மாரியப்பா நகரில் இயங்கி வரும் அன்பகம் முதியோர் இல்லம், சிதம்பரம் புற வழிச் சாலை CCWE மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள் மற்றும் முதியோர் சாதனையாளர் இல்லம் சென்று உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கி துவக்கி வைத்தார்.

நிகழ்வில் சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அன்வர் அலி, பொருளாளர் மௌலவி ஷாஹுல் ஹமீது பாகவி,MYM பைசல் மஹால் உரிமையாளர் முஹம்மது யாசின் ஹாஜியார், நவாப் பள்ளி இமாம் மௌலவி ஹஜ் முஹம்மது ரப்பானி, முபாரக் அலி, முஹம்மது அலி கான், முஹம்மது முஸம்மில், ஜியாவுதீன் அஹமது கான், முஸ்லிம் யூத்லீக் கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது முஸ்தபா, செயலாளர் மெளலவி நூருல் அமீன் ரப்பானி, லால்பேட்டை எம் எஸ் எப் இம்ரான், செய்யது மொய்தீன், ஜாகீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

















Tags: சமுதாய செய்திகள்

Share this