இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு லால்பேட்டையில் நடைபெறும் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு..!
*2025 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி கடலூர் தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு லால்பேட்டையில் நடைபெறும் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு.*
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் லால்பேட்டை முபாரக் ஷரீஃப் மஹாலில் எழுச்சியோடு நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் எஸ் எம் அனீசுர் ரஹ்மான் தலைமை வகித்தார்.
லால்பேட்டை நகர மார்க்க அணி செயலாளர் மௌலவி தவ்ஃபீக் இறைமறை வசனங்கள் ஓதினார் -
மாவட்ட செயலாளர் எ.சுக்கூர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தலைமை நிலைய பேச்சாளர் யு சல்மான் பாரிஸ் துவக்க உரையாற்றினார்.
லால்பேட்டை நகரத் தலைவர் எஸ் எம் அப்துல் வாஜிது, நகர செயலாளர் முஹம்மது தையிப் முஹிப்பி , சிதம்பரம் நகரத் தலைவர் அன்வர் அலி, பரங்கிப்பேட்டை நகர செயலாளர் சேக் ஆதம் மழாஹிரி, மங்களம்பேட்டை நகரத் தலைவர் நூர் முகமது, ஆயங்குடி நகரத் தலைவர் சகாபுதீன,கொள்ளுமேடு நகர தலைவர் முஹம்மது ஜுனைது,பின்னத்தூர் நூருல் அமீன் ரப்பானி, மானியம் ஆடூர் முஹமது சுலைமான்,ஆகியோர் மாநாட்டை எழுச்சியோடு நடத்துவது குறித்து கருத்துரை வழங்கினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கெளரவ ஆலோசகர் டாக்டர் ஏ.ஆர்.அப்துஸ் ஸமது, மாநில துணைச் செயலாளர் ஏ எஸ் அப்துல் ரஹ்மான் ரப்பானி ஆகியோர் விளக்க உரையாற்றினர்.
கூட்டத்தில் மாவட்ட யூத் லீக் அமைப்புக்குழு உறுப்பினர் ஏ எஸ் அஹமது,மாவட்ட துணைத் தலைவர் கொள்ளுமேடு முகம்மது ஹாரிஸ், மாவட்ட துணை செயலாளர் லால்பேட்டை மசூத் அஹமது, மாவட்ட இளைஞரணி தலைவர் முஹம்மது முஸ்தபா, இளைஞர் அணி பொருளாளர் முஹமது முபாரக்,தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் இம்தியாஸ்,எள்ளேரி ஜெ,அலாவுதீன்,மங்கலம்பேட்டை சலாவுதீன், சபியுல்லாஹ், சுஜாவுதீன், ஆயங்குடி முஹம்மது அலி, மானியம் ஆடூர் குத்புதீன் ஹாஜியார், வதூத்,மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இலியாஸ் உள்ளிட்ட மாவட்ட நகர நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை லால்பேட்டை நகர பொருளாளர் எம்ஹெச்.முஹிப்புல்லாஹ், சவுதி காயிதே மில்லத் பேரவை பொறுப்பாளர் ஏ.கே.முஹம்மது அஸ்கர், நகர துணைத் தலைவர்கள் மௌலவி அமீனுல் ஹுசைன். ஹாமீது.சபியுல்லாஹ். முஹம்மது அய்யூப், முஹம்மது பஷீர், நஜியுல்லாஹ்,எஸ்.எம் சைபுல்லாஹ், நகர துணை செயலாளர் முஹம்மது சித்திக்,அமானுல்லாஹ், அபுசுஹுது, நஜியுல்லாஹ், அபுசுஹுது,
நகர இளைஞரணி ஹாமீம் ஃபைஜி, ஹிதாயத்துல்லாஹ், சிராஜுதீன், நகர மாணவரணி தஸ்லீம், நிஜாம், ரஹீக், உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தை சிறப்பாகஒருங்கிணைத்திருந்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
இரங்கல் தீர்மானம் :
*ஒன்றுபட்ட கடலூர் மாவட்டத்தின் துடிப்பு மிக்க தாய் சபை தளகர்த்தராக விளங்கிய கடலூர் வடக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக சிறப்பாக பணியாற்றி மறைந்த மர்ஹும்ம் ராஜா ரஹீமுல்லாஹ் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க இக்கூட்டம் பிரார்த்திக்கிறது*
*லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த ஊழியர்களாக திகழ்ந்த கேப்டன் அப்துல் ரவூப்,வி.ஆர்.ஷபியுத்தீன், ஹபீபுல்லாஹ்,எஸ்.முஹம்மது சாலி,பிரான்ஸ் முஹம்மது பஷீர் ஆகியோரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க இக்கூட்டம் பிரார்த்திக்கிறது.*
காயிதே மில்லத் பெயர் சூட்டுக:
*தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என இந்திய அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் பெயரை லால்பேட்டை அரசினர் மேல் நிலைப்பள்ளிக்கு சூட்ட வேண்டும் என இச்செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது .*
வாழ்த்து:
*இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில சரித்திரத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தாய்ச் சபையின் தனி சின்னமாம் ஏணி சின்னத்தில் வெற்றி வாகை சூடிய இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான மாண்புமிகு கே.நவாஸ் கனி சாஹிப் அவர்களுக்கு இக்கூட்டம் நல்வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.*
மாவட்ட மாநாடு :
*இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட மாநாடை எதிர்வரும் 2025 ஜனவரி 5ஆம் தேதி லால்பேட்டை நகரில் சிறப்பாக நடத்துவது எனவும், மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட விருந்தினர்களை பங்கேற்க செய்வது எனவும் செயற்குழு கூட்டம் தீர்மானிக்கிறது.*
*இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட மாநாட்டை சிறப்போடும், எழுச்சியோடும் நடத்துவதற்கு கீழ் காணும் குழுக்களை செயற்குழு நியமனம் செய்கிறது.*
*ஒருங்கிணைப்பு குழு*
ஏ.எஸ் அப்துல் ரஹ்மான் ரப்பானி
எம்.ஏ.முஹம்மது ஜெகரியா
ஏ.சுக்கூர்
எம்.ஷஹாபுதீன்
*நிதி குழு*
ஏ.முஹம்மது தையிப் முஹிப்பி
எஸ்.எம்.அப்துல் வாஜிது
எம்.ஹெச் முஹிப்புல்லாஹ்
மெளலவி ஏ.முஹம்மது மன்பஈ
எம் .அன்வர் அலி
கவிஞர். மஹபூப் ஹுஸைன்
*மஹல்லா ஜமாஅத் அழைப்பு குழு*
விருத்தாசலம் மெளலவி சபியுல்லாஹ் மன்பஈ
சிதம்பரம் அப்துல் ரியாஸ்
மௌலவி ஷேக் ஆதம் மழாஹிரி
மங்கலம்பேட்டை நூருல்லாஹ்
கொள்ளுமேடு முஹம்மது ஜுனைது
லால்பேட்டை நகர் சுற்றுவட்டார அழைப்பு குழு
எஸ்.எம். அனீசுர் ரஹ்மான்
எம்.எஸ் முஹம்மது சித்தீக்
மெளலவி முஹம்மது அய்யூப்
மெளலவி அமீனுல் ஹுசைன்
*அழைப்பிதழ் மற்றும் மேடை அமைப்பு குழு*
எஸ்.எம்அப்துல் வாஜிது
முஹம்மது தையிப் முஹிப்பி
எம்.ஹெச்.முஹிப்புல்லாஹ்
யூ.சல்மான் பாரிஸ்
எஸ்.ஏ. அஸ்கர் அலி
ஹெச்.எம் முஹம்மது முபாரக்
ஹெச்எம் ஹஸன்
*பிரச்சார குழு*
யூ.சல்மான் பாரிஸ்
சுஜாவுதீன்
துராபுதீன்
*விருந்தினர் வரவேற்பு குழு*
எம்.முஹம்மது முஸ்தபா
ஏ.ஹாமிம் ஃபைஜி
ஏ.எஸ் அஹமது
ஹெச்.ஹிதாயத்துல்லாஹ்
எம்ஹெச் மஹபூப் அலி ரப்பானி
ஏ.ஆர்.சிராஜுதீன்
*தன்னார்வலர் தொண்டர் குழு*
தஸ்லிம்
நிஜாம்
ரஹீக்
முதஸ்ஸர்
உஸ்மான்
*ஊடகம் மற்றும் விளம்பர குழு*
இம்தியாஸ்
ஏ.கே.அஸ்கர்
ஏ.எஸ்.முஹம்மது இஸ்மாயில்
ஹாஸிம்
முஸாஹிர்
ஆஷிக்
இம்ரான்
அசார்
பரங்கிபேட்டை ரயில்சேவை :
*ஒன்றிய இரயில்வே அமைச்சர் அவர்களிடம் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ள திருச்செந்தூர் விரைவு இரயில் பரங்கிப்பேட்டையில் நின்று செல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திருச்சி கோட்ட அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டும் நிறைவேறாமல் உள்ள திருச்செந்தூர் விரைவு இரயில் பரங்கிப்பேட்டையில் நின்று செல்ல ஆவண செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.*
*கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க கடலூரில் இருந்து சிதம்பரம் வழியாக திருச்சி செல்லும் பேருந்துகளில் சிலவற்றை பரங்கிப்பேட்டை வழியாக இயக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.*
சிதம்பரம் ரயில் சேவை:
*கோயம்புத்தூர் மயிலாடுதுறை வண்டி எண் 12083/84 *ஜன சதாப்தி* ரயிலுக்கு சிதம்பரம் வரை நீட்டிப்பு உடனடியாக வழங்க வேண்டும்.*
*சிதம்பரத்தில் நிற்காமல் செல்லும்
தாம்பரம்/செங்கோட்டை வண்டி எண் 20683/4*
*தாம்பரம் /காரைக்கால் வண்டி எண் 16175/6*
*அயோத்தி /ராமேஸ்வரம் வண்டி எண் 22613/4*
*ஆகிய மூன்று ரயில்களுக்கும் உடனடியாக நிறுத்தம் வழங்க வேண்டும்.*
*காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சிதம்பரம் வழியாக திருச்சி செல்ல ரயில் சேவை
வழங்க வேண்டும் என இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.*
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம் கொள்ளுமேடு கிராமம் கடந்த 1967ம் ஆண்டு முதல் தனி ஊராட்சியாக பிரிக்கப்பட்டு இது நாள் வரையும் மதுரா கிராமமாக இருந்து வருகிறது.
இந்த கிராமம் தனியாக பிரிக்கப்பட்டு சுமார் 60 ஆண்டுகள் நிறைவடைந்தும் அதன் பரப்பளவு கூடுதலாக இருந்தும் மக்கள் தொகை அதிகப்படையில் அதிக குடும்பங்கள் வசிக்கக்கூடிய கிராமமாக தண்ணிறைவு பெற்று இருந்து வருகிறது. ஆனால் மதுரா கிராமமாகவே தான் இது நாள் வரையும் இருந்து வருகிறது. ஆகவே ஊரின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நலத்திற்காகவும் வருவாய் கிராமமாக மாற்றித் தருமாறு வருவாய் துறையினரை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
மாவட்ட பொருளாளர் ஷஹாபுதீன் நன்றி கூட, மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது ஹாரிஸ் மன்பஈ துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.
Tags: லால்பேட்டை