ஜித்தா அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத் பொதுக்குழு நடைபெற்றது..!
ஜித்தா அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமாத்தின் 11-ஆம் ஆண்டு பொதுக்குழு 06-12-2024 வெள்ளிக் கிழமை ஷரஃபியாவில் உள்ள உசாமா இல்லத்தில் தலைவர் T. N.ஜியாவுத்தீன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மௌலவி புகாரி மன்பஈ அவர்கள் கிராத் ஓதி நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி A.A. முஹம்மது மன்பஈ அவர்களும், ரியாத் மாநகரில் இருந்து வருகை தந்த அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமாஅத் பொருளாளர் S.M. முஹம்மது நாசர் பாய் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பான முறையில் ஜமாத் உருவான வரலாறு அதன் நோக்கம், ஜமாஅத் செயல்பாடு மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பற்றியும் இதை நாம் ஏன் தொடர்ந்து செய்யவேண்டும் என்ற விளக்கத்தையும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துரைத்தார்.! உரையாற்றினார்.!
செயலாளர் A. நூருல் அமீன் அவர்கள் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளை சமர்பித்தார்.
செயலாளர் கஜ்ஜாலி அவர்கள் 2024 சந்தா வசூல் செய்யும் பொறுப்பு சிறப்பாகச் செய்து இருந்தார்.
Tags: லால்பேட்டை