Breaking News

ஊரைப்பற்றி

லால்பேட்டை:


 


 

தமிழகத்தில்இஸ்லாமியர்கள் அதிகம் வாழும்ஊர்களில், பிரசித்தி பெற்றது லால்பேட்டை நகரம்.  அதன் அடையாளங்களில் ஆன்மிகத்தின் மணம்வீசும். இங்கேகாற்றும் இறைமறைஓதும். நாற்றும், நாணல்களும் நான்காம் கலிமாகூறும்.  சான்றோர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற ஈமான் என்ற இறை நம்பிக்கையால் அடித்தளமிடப்பட்ட வீராணம்கரையோரம் அமையப் பெற்றுள்ளது லால்பேட்டை.

 

சுற்றியுள்ளகிராமங்களில் ஏதேனும் பிரச்சனைகள் மூண்டால், பாதுகாப்பு கருதி லால்பேட்டையில் பேருந்துகளை  நிறுத்தி விட்டுச் செல்லுமளவிற்குப் பாதுகாப்பான ஊர். தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது லால்பேட்டை நகரம். இது, காட்டுமன்னார்கோவில் வட்டத்திற்கு உட்படுகிறது. தற்போது பேரூராட்சியாக  வளர்ச்சிக் கண்டுள்ளது. இப் பேரூராட்சி    13,550  ச.கிமீபரப்பளவுக்கொண்டது. காட்டுமன்னார்கோவில் (சட்டமன்றத்தொகுதி) க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.


இப்பகுதியில்2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 16,561    மக்கள் தொகையும், தற்போதைய மக்கள் தொகை 18,567 ஆகவும்இருக்கின்றது. இவை அரசு கூறும் மக்கள் தொகைக் கணக்கு. (ஆண்-8,209 பெண்-8,352)ஆனால், இங்கு முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர் மற்றும் 250 மக்கள் தினசரி வந்து செல்கின்றனர்
இங்கு வாழும் இஸ்லாமியர்கள் வணக்கவழிப்பாடுகளில் கவனம்செலுத்த, கி.பி 1767 –ஆம்ஆண்டு சிறிய அளவில் ஜாமிஆமஸ்ஜிதை கட்டிக்கொடுத்துள்ளார்.   இதன்சுற்றியுள்ள, வடக்குத் தெரு, கீழத்தெரு,மேலத்தெருக்களில் இஸ்லாமியமக்கள் வாழ்ந்திருக்க வேண்டும். இல்லையேல், இந்தப் பகுதியைச் சீரமைக்க நகரத்தந்தையே இஸ்லாமிய மக்களை அழைத்து வந்துகுடியமர்த்தி இருக்க வேண்டும். இதில் எதையும் உறுதியாகக் கூறநேரடியான‌ ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை.


மக்களுடன் குற்றேவலர்களும் இணைந்து இந்த ஊரின் வளர்ச்சிகளுக்கு வித்துக்களாக மாறியுள்ளார்கள். இந்தப்பகுதிக்குள் இஸ்லாமியர்களை மட்டும் குடியமர்த்தாமல் மாற்று மத சகோதரர்களையும் அழைத்து வந்து குடி யமர்த்தியுள்ளார் நகரத் தந்தை. அவர்களின் மத வழிப்படி இறை வணக்கம் செய்துக் கொள்ள கோயில் ஒன்றும், அதற்கு அருகாமையில் குளம் ஒன்றையும் வெட்டி அவர்களின் நீராதாரத்திற்கு வழிவகை அவரால் செய்யப்பட்டுள்ளது. "முஸாஃபர்கானா", வெளியூர்களிலிருந்து வரும் மக்கள் ஓய்வு எடுக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. தேன்களைச் சேகரித்துத் தேன் கூட்டை உருவாக்கும் தேனீக்கள் போல் உருவெடுத்து, பலவகையான முயற்சிகளுக்குப் பிறகு லால்கான்பேட்டை என்ற அழகான கூடு இவரால் உருவாக்கப்பட்டுள்ளது.


(Floting Population). மேலும்,1954- ஆம் ஆண்டுபேரூராட்சி தொடங்கப்பட்டுள்ளது. இப்பேரூராட்சி  15 வார்டுகள் உள்ளடக்கியது. 57 தெருக்களைக் கொண்டு 13,.550சதுர கிமீ பரப்பளவுகொண்ட முதல் நிலை பேரூராட்சியாகும். மொத்த வரி விதிப்புகளின் எண்ணிக்கை 3617 (குடியிருப்புகள் 3532) கொண்டபேரூராட்சியாகும். மேலும் ஆறுநீர்நிலைகள், 8,99  கொள்ளலவு கொண்ட நீர்நிலைகள் இங்குப்பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பேரூராட்சியில் மொத்தம் 719 தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. (குழல் விளக்கு- 457, சோடியம் விளக்கு-106, அடர்மின் விளக்கு-154,உயர் கோபுர விளக்கு-02).இங்குவாழும் அனைவரும் இஸ்லாமியர்கள் என்பது கூடுதல் செய்தி.. ஊரின் நுழைவுப்பகுதியான சிதம்பரம் மெயின்ரோட்டில் இந்து சமுதாயமக்கள் வாழ்ந்த வருகின்றனர். இதேபோல் திருவள்ளுவர் தெருவில் கிருஸ்த்வ சமூகத்தைச் சார்ந்தமக்களும் வசிக்கின்றனர்.

 

 லால்கான் பேட்டை என்பதிலிருந்துமருவி லால்பேட்டை என்ற பெயர் பயன்பாட்டில் வாழ்ந்து வருகிறது. இந்தப்பகுதிக்கு லால்பேட்டை என்ற பெயர் வருவதற்கு காரணமானவர் லால்கான் ஔரங்சீப்பின் மரணத்திற்குப்பிறகு அவரின் அமைச்சரவையில் ஒருவரான மீர்கமருதீன்கான் பகதூர் முதல் ஹைதராபாத்நிஜமாகப் பதவி ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு ஆற்காடு முதல் திருச்சிராப்பள்ளி வரையிலான அனைத்து பகுதிகளையும் தன்வசம்கொண்டு வந்துவிடுகிறார். அவருக்குப் பிறகு நிஜாமுதவ்ளா என்கிற நாசிர்ஜன்க் என்பவர் நிஜமாகப்பதவி ஏற்றுக்கொள்கிறார்.

 

பிரெஞ்ச்கிழக்கிந்தியக்கம்பனியினருடன் நாசிர்ஜன்கின் நட்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. இவரின் பலம் மற்றும் பலவீனங்களை நன்கு தெரிந்துகொண்ட பிரெஞ்ச்காரர்கள் நாசிர்ஜன்கின்ஆளுமையின் கீழ் அமைந்திருந்த இடங்களை தங்கள் வசப்படுத்திக் கொண்டனர்.

 

தன் ஆட்சிக்கு ஆதரவுக்கரம் நீட்ட ஆற்காடு சுபேதாராகபதவிவகிக்கும் அன்வர்தீன்கான் மற்றும் அவரது மகன் முஹம்மதுஅலி வாலாஜாவிற்கும் நாசிர்ஜன்க் மூலம் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அனுப்பப்பட்ட கடிதம் இருவராலும் மறுக்கப்பட்டுப்போனது.அதனால், போர்மூளக்கூடியசூழல்ஏற்பட்டது.  அதில் அன்வருதீன்கான் கொல்லப்படுகிறார்.

 

நாசிர்ஜன்க்கிற்குகட்டுப்படமறுத்துவிட்டார்நவாப்வாலாஜா. தேவிபபட்டினமும், சென்னைபட்டினமும்ஆங்கிலேயர்கைவசம்சென்றதைநாசிர்ஜன்க்விரும்பவில்லை. இருஇடங்களைமீட்க, தனதுவிசுவாசிகளான‌ஹிம்மத்கான்சென்னைக்கும் , அப்துல்நபிகான் தேவிபட்டினத்திருக்கும்நாசிர்ஜன்கால்அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

 

பண்ருட்டிபக்கம் திருவடியில் நவாப்வாலாஜாகான்படைகளுக்கு எதிராகப்பிரெஞ்சுபடைகளும், அப்துல் நபிகான்படைகளும் போர்தொடுத்தன. இதில் நவாப் வாலாஜாகானின் படைகள் வெற்றிபெற்றபின் ..  பிரெஞ்சுப்படைகள் பாண்டிச்சேரியில்ஒளிந்துகொண்டன. அப்துல் நபிக்கானின்படைகள் சிதம்பரத்தில்ஒளிந்துகொண்டன.

 

அப்துல் நபிகானின் கட்டுப்பாட்டுக்குள் சிதம்பரம் வந்தது. தன்நம்பிக்கையான லால்கான் பகுதூர்மியாக்கானை  (லால்பேட்டையைஉருவாக்கியலால்கானின்இயற்பெயர்) சிதம்பரத்தில் பள்ளிவாசல்களை உருவாக்க ஆணையிட்டார். அந்நேரத்தில், தன் ஆட்சிக்கு தனது குடும்பத்தினரால் ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சினார் அப்துல் நபிகானைஹைதராபாத்திற்கு வரும்படி அழைப்பு கொடுத்தார் நாசிர்ஜன்க். லால்கான்பகதூரை (லால்கானை) சிதம்பரத்தின் கவர்னராக நியமித்து ஹைதராபாத் நோக்கி விரைந்தார் அப்துல் நபிகான்.

 

இதற்கிடையில், அப்துல் நபிகான் ஹைதராபாத் செல்வதற்குள் நாசிர்ஜன்க் தனது சகோதரிமகன்முஜாஃபர்கான் மூலம்கொல்லப்படுகிறார். லால்கான்பகதூரிடம் சிதம்பரத்தை முழுமையாக ஒப்படைத்து விடுகிறார் அப்துல் நபிகான்.

 

1753-1756 ஆம் ஆண்டுகளில் சிதம்பரத்தில் இரண்டு பள்ளிவாசல்களை கட்டி முடிக்கிறார்லால்கான் (இவை தற்போது லால்கான் மற்றும் வாப்பள்ளியாகஅழைக்கப்பட்டு வருகிறன). இந்தநேரத்தில், லால்பேட்டை பக்கம் லால்கான்பகதூரின் பார்வை திரும்பியது வீராணஏரியின் நீர் அனைவருக்கும் பயனளிக்கும்வகையில்  தற்போது கான்சாஹிப் வாய்க்கால் என்று அழைக்கப்படும் வாய்க்கால் ஒன்றை வெட்டுகிறார். இவர் சிதம்பரத்தில் கவர்னராக இருந்த நேரத்தில் லால்பேட்டைய ைஉருவாக்கியிருக்கலாம். நவாப் அன்வருதீன் அமைச்சரவையில் லால்கான் இடம்பெற்றதாக கூறப்பட்டு வந்த நிலையில்,  மேற்கண்ட தகவல்படி,இவர் நவாப் அன்வருதீன் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்பது நமக்குத் தெளிவாகிறது.

 

தன்ஆளுமையைவிரிவுபடுத்தவும்  (அ) இஸ்லாமியர்களை குடியமர்த்த லால்பேட்டையை அவர் உருவாக்கி இருக்கவேண்டும். சிதம்பரத்தில் லால்கான் பள்ளிவாசல் மற்றும் நவாப் பள்ளிவாசல் கட்டப்பட்டபிறகு, லால்பேட்டை ஜாமிஆ பள்ளிவாசல் இவரால் கட்டப்பட்டுள்ளது என்பது நமக்கு வரலாற்றை அடுத்தக் கட்ட நகர்வுக்கு நகர்த்தச் செய்கிறது.

 

“இதுவும் ஒரு ஆய்வுதான். ஆனாலும்,முடிவல்ல. இதை விட ஆதாரப்பூர்வமான வரலாற்று குறிப்புகள் யாருக்கேனும் கிடைக்கப்பெற்றால்! புதிய வரலாறாக வெளியிட்டுக் கொள்ளலாம்.”

 

இந்நகரம்கி.பி 1760 - ஆம்ஆண்டுகளுக்குப் பிறகு மக்களின் மூச்சுக்காற்றைச் சுவாசித்திருக்கிறது என்பதை சில கல் வெட்டுக்கள் நம்காதில்கூறுகிறது. இம் மாநகரத்தின் உருவாக்கம் தொன்மையானது. இதனை லால்கான் கட்டிய ஜாமிஆமஸ்ஜிதின் உள் கூடும் உணர்த்துகிறது. இம்மாநகரம் உருவாகி 250 ஆண்டுகளைக் கடந்து 300 - ஆம்ஆண்டை நுகரத்த யாராகிக் கொண்டிருக்கின்றது.

 

இப்பகுதியைச் செழிப்பாக மாற்ற பலவிதமுயற்சிகள் லால்கான்மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க சில நுணுக்கங்களையும் தேடினார். தன்  சகாக்களைத்துணைக்குவைத்து இங்குத்தங்கிப் பல சேவைகளைச் செய்யத் தொடங்கினார். ஆளுநர் தங்கியிருந்த இடம் "கான்இருப்பு" என்று பெயர் பெற்றது. தற்காலத்தில் "காங்கிருப்பு" என்று பெயருடன் அழைக்கப்பட்டு வருகிறது.

 

இந்தப் பகுதியை தன் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வரத்தொடங்கினார். கொஞ்சம், கொஞ்சமாக இந்த ஊரின் வளர்ச்சிக்கு விதைப் போடத்துவங்கினார். இந்தப் பகுதியை நிர்வகிக்கதன் கீழ் பணிபுரிந்தவர்களை அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.. அவரிடம் பணி புரிந்தகுற்றேவலர் தங்கிய இடம்,இன்று கொத்தவால்தெரு என்ற பெயரில் அவர்களின் நினைவாக அழைக்கப்பட்டு வருகிறது.