Breaking News

ஜூலை 23-ல் விரிவாக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்பு

நிர்வாகி
0
சிதம்பரம் அண்ணாமலைநகரில் விரிவாக்கப்பட்ட மஸ்ஜிதே மஹ்மூத் பள்ளிவாசல் திறப்பு விழா ஜூலை 23-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
பேராசிரியர் மேஜர் ஜி.முஸ்தபாகமால் தலைமை வகிக்கிறார். கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவைத் தலைவரும், லால்பேட்டை அரபுக் கல்லூரி முதல்வருமான ஏ.நூருல்அமீன் ஹஸ்ரத் பள்ளிவாசலை திறந்து வைத்து உரையாற்றுகிறார்.
ஹிந்தி பேராசிரியர் எஸ்.காதர்மொஹிதீன் வரவேற்கிறார். மாநில ஜமாஅத்துல் உலமா பேரவைத் தலைவர் ஏ.இ.எம்.அப்துர்ரஹ்மான், நகரத் தலைவர் எஸ்.எம்.ஸதகத்துல்லாஹ், முகமது இஸ்மாயில்நாஜி, வி.ஆர்.அப்துல்ஸமது ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். பி.முஹம்மதுயாஸின் நன்றி கூறுகிறார்.

Tags: பள்ளிவாசல்திற‌ப்பு விழா

Share this