Breaking News

த‌மிழ‌க‌ அர‌சின் திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் சட்ட முன்வடிவு

நிர்வாகி
0
த‌மிழ‌க‌ அர‌சின் திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் சட்ட முன்வடிவு :



மறுபரிசீலனை செய்ய முஸ்லிம் லீக்கின் த‌லைமையில் ச‌முதாய‌ அமைப்புக‌ள் வேண்டுகோள்தமிழ்நாட்டில் திருமணங் கள் அனைத்தையும் கட்டா யமாக பதிவு செய்வதற்கு வழிவகை செய்வதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட முன்வடிவை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி சிறுபான்மை முஸ்லிம் களின் ஐயப்பாட்டை தமிழக அரசு போக்க வேண்டுமென முதல்வர் கலைஞர் அவர்களை கேட்டுக் கொண்டு முஸ்லிம் அமைப்புகள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.



திருமணங்களை கட் டாயமாக பதிவு செய்வ தற்கு வழிவகை செய்யும் சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டமன்ற நடப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதுதொடர்பாக முஸ்லிம்களிடையே எழுந் துள்ள அச்ச உணர்வை போக்கவும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு அதனை கொண்டு செல்ல வும் ஒருமித்த கருத்தை பெறுவதற்கான ஆலோசனை கூட்டம் 7-7-09 செவ்வாய் மாலை 5.30 மணிக்கு சென்னை ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள ஹோட்டல் பிரசி டெண்டில் நடைபெற்றது.



தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஏற்பாட்டில் நடை பெற்ற இக் கூட்டத்திற்கு தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.



இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம். அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் ஆம்பூர் எச். அப்துல் பாஸித், சட்ட மன்ற முன்னாள் இந்திய தேசிய லீக் உறுப்பினர் எம்.ஜி.கே. நிஜாமுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் (பொறுப்பு) கே.ஏ. எம். முஹம்மது அபுபக்கர், மாநில பொருளாளர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது, மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், அணிகளின் அமைப்பா ளர்கள் வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன், என். ஹாமித் பக்ரீ, கே.எம். நிஜாமுத்தீன், மில்லத் இஸ்மாயில், தமிழ் நாடு வக்ஃபு வாரிய உறுப் பினரும், தமிழ்நாடு மாநில தேசிய லீக் பொதுச் செயலாளருமான திருப்பூர் அல்தாப், த.மு.மு.க. மாநிலச் செயலாளர் ஏ.எஸ். முஹம்மது ஜுனைது, த.மு.மு.க. மாநில வர்த்தக அணி செயலாளர் பி.எல்.எம். யாசின், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொறுப்பாளர் அப்போலோ முஹம்மது ஹனீபா, சென்னை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவரும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினருமான எம். முஹம்மது சிக்கந்தர், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச் செயலாளர் எஸ்.எம். ஹிதாயத்துல்லா, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் அ.ச. உமர் பாருக், ஐக்கிய சமாதான அறக்கட்டளை பொறுப்பாளர் சி. அபூபக்கர் சித்திக், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை செய்தித் தொடர்பாளர் கே.எம். இல்யாஸ் ரியாஜி, சுன்னத் ஜமாஅத் ஆன்மீக பேரவை தலைவர் தேங்கை சர்புதீன் மிஸ்பாஹி, ஜமாஅத்தெ இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் எஸ். என். சிக்கந்தர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் பிரசிடெண்ட் ஏ. அபூபக்கர், தமிழக சட்டமன்ற முன்னாள் இணைச் செயலாளர் வழக்கறிஞர் எம். நாகூர் மீரான், பேராசிரியர் டாக்டர் சையத் ரபீக் அஹமது, பேராசிரியர் ஆர்.என். இக்பால் அஹமது ஆகியோர் கருத்துக்களை வழங்கினர்.

இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு-

தமிழக அரசின் திருமண கட்டாயப்பதிவு மசோதா, அனைத்து திருமணங்களை யும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நன்னோக்கத்தில் வரைவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக முஸ்லிம்கள் மத்தியில் காலங்காலமாக திருமணங்களை பதிவு செய்யும் மரபை மஹல்லா ஜமாஅத் மற்றும் காஜிகள் மூலம் பின்பற்றி வருகிறது.

தமிழக அரசின் திருமணப் பதிவு மசோதாவில் முஸ்லிம் தனியார் சட்டப்படி நடைபெறும் திருமணப்பதிவுகளையும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நிலை எடுக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம் தனியார் சட்டத்தை பொது சிவில் சட்டத்துடன் இணைக்கும் விதத்தில் இது அமைந்து விடுமோ என்னும் ஐயப்பாடு சமுதாயத்தில் எழுந்திருக்கிறது.

நடைபெற்ற நாடாளு மன்ற தேர்தல் அறிக்கை யில் இந்திய அளவில் ஒரே விதமான சிவில் சட்டம் கொண்டு வரும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்த தி.மு.க. பாடுபடும் என்று டாக்டர் கலைஞர் தெரிவித்திருக்கிறார்கள்.

நிலைபாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசின் இந்த மசோதாவை மறுபரி சீலனைக்கு உட்படுத்தி, சிறுபான்மை முஸ்லிம் களின் ஐயப்பாட்டை நீக்கும் வகையில் வேண்டிய திருத்தங்களை செய்து பின் னர் நிறைவேற்ற வேண்டும் என இக் கூட்டம் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக வட சென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் என். ஜெய்னுல் ஆபிதீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மவ்லவி ஹாமித் பக்ரீ இறைமறை ஓதினார்.

இக் கூட்டத்தில் மாநில முஸ்லிம் லீக் விவசாய அணி துணை அமைப் பாளர் திருச்சி வி.எம். பாரூக், தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.பி. இஸ்மத் பாட்சா, செயலாளர் ப+வை எம்.எஸ். முஸ்தபா, வட சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் ஏ.எச். இஸ்மாயில், மாநில முஸ்லிம் லீக் கல்வி மேம் பாட்டு துணை அமைப் பாளர் ஏ. ஷேக் மதார், யு. முஹம்மது சலீம் சித்தீக், கே.எம். ஹசன் சேக், வட சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.கே. எம். ரஃபி, பூவை காதர், டி.எம்.கே. ஹாஜா நஜ் முத்தீன், திருவான்மியூர் காஜா, சுன்னத் ஐக்கிய ஜமாஅத் பேரவை கிருஷ் ணாம்பேட்டை கிளை செயலாளர் எம்.ஏ. முஹம் மது இப்ராஹீம் ரஹ்மத்துல்லாஹ், ஜமாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மவ்லவி சலீம் சிராஜி துஆ ஓதினார்.

Tags: திருமணம்

Share this