Breaking News

“இஸ்லாமிய திருமணம்” என்ற அந்தஸ்த்தை பெரும் திருமணம்

J.நூருல்அமீன்
0
“இஸ்லாமிய திருமணம்” என்ற அந்தஸ்த்தை பெரும் திருமணம்

தவிர்க்கப்பட வேண்டிய இஸ்லாத்திற்கு புறம்பானவை

மணமக்களை பூமாலை மலர்களால் அலங்கரித்து அழைத்து வரல்.
திருமணத்திற்கு முந்திய நாளிரவு மணமக்களுக்கு மருதாணி இடுதல், நலங்கிடல் என்ற பெயரில் சடங்கு செய்தல்.
கைக்கூலி எனும் வரதட்சணை வாங்குதல்.
மாலை மாற்றுதல், வெற்றிலை மாற்றுதல், அரிசி அளத்தல், பல்லாங்குழி விளையாடல் போன்றவை.
மணமேடைக்கு மணமகன் வருகையில் ஆரத்தி எடுத்தல்,
ஆட்டுத்தலை, கோழி போன்றவற்றை தலை சுற்றி எறிதல்.
மணமகனுக்கு பெண் வீட்டார் நிறைகுட தண்ணீர்வைத்து அதில் அவரின் காலை கழுவி விடல்.
மணமகனுக்கு தங்க மோதிரம், மைனர் செயின் அணிவித்தல்.
மணமகளுக்கு தாலி மற்றும் கருகமணி கட்டுதல்.
மணமக்களை வைத்து மஞ்சள் பூசி நலங்கு பாடுதல்.
நல்லநேரம், சகுணம் பார்ப்பது, சடங்குகளின் பெயர்களால் வரம்புமீறி, ஆண், பெண் (திரை) ஹிஜாபின்றி இஸ்லாம் அனுமதிக்காத விதத்தில் விளையாடி மகிழ்வது.
மேடை அலங்காரம், மேளவாத்தியம் என்று அனாச்சாரமாக பணத்தை செலவழிப்பது.பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின்பல சந்தர்ப்பங்களில் சீர்வரிசை என்ற பெயரில் பொருட்களை கேட்டு வாங்குவது.
சுன்னத்தான தாடியை முகச்சவரம் என்ற பெயரில் வழித்தல்.
திருமணதன்று பெண் வீட்டாரிடம் விருந்து கொடுக்க நிர்பந்திப்பது.
மணமக்களை தர்ஹாகளுக்கு அழைத்து செல்வது.
இந்த சடங்குகள் அனைத்தையும் விட்டு விடுபட்டு செய்யப்படும் திருமணங்களே இஸ்லாமிய திருமணம் என்ற அந்தஸ்தைப் பெரும்.

இஸ்லாத்திற்கு மாற்றமாக இது மாதிரியான திருமணங்களை புறக்கணித்து சமுதயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

————————————————————————————————

Tags: திருமணம்

Share this