Breaking News

முஸ்லீம் இடஒதுக்கீடு: மக்களவையிலிருந்து ஆர்ஜேடி, சமாஜவாதி எம்பிக்கள் வெளிநடப்பு

நிர்வாகி
0
அரசுப் பணிகளில் முஸ்லீம்களுக்கு அதிகஅளவில் பிரதிநிதித்துவம் வழங்கும் விவகாரம் தொடர்பாக மக்களவையிலிருந்து கேள்விநேரத்தின்போது சமாஜவாதி எம்பிக்களும், ராஷ்ட்ரீய ஜனதாதள எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.


பல்வேறு அரசுத் துறைகளில் முஸ்லீம்களுக்கு பகுதி அளவு பிரதிநிதித்துவம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதா என்பதை அறிய விரும்புவதாக ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் கோரிக்கை விடுத்தார்.

எனினும் நிகழ்ச்சிநிரலில் பட்டியலிடப்படாததால் இக்கேள்விக்கு பதிலளிக்க முடியாது என சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

அவருடன், காங்கிரஸ் அரசை முஸ்லீம்களுக்கு எதிரான அரசு என வர்ணித்த லாலு பிரசாத், அமைச்சர் இதுதொடர்பாக உரிய பதிலளிக்க வேண்டும் என்றார்.

நோட்டீஸ் அளித்த பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்கலாம் என மக்களவைத் தலைவர் மீராகுமார் அவர்களுக்கு பதிலளித்தார்.

இதைத்தொடர்ந்து மக்களவையிலிருந்து ராஷ்ட்ரீய ஜனதாதள எம்பிக்களும், சமாஜவாதி எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.

Share this