Breaking News

115-வது பிறந்த நாளையொட்டிகாயிதேமில்லத் நினைவிடத்தில் அனைத்துகட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தினர்

நிர்வாகி
0

காயிதேமில்லத் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி மலர் போர்வை வைத்து மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட அனைத்து கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

கருணாநிதி மரியாதை

காயிதே மில்லத்தின் 115-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று காலை 9.15 மணியளவில் திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய மசூதியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் போர்வை வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி தயாநிதி மாறன், அமைச்சர்கள் மைதீன்கான், உபயதுல்லா, பரிதி இளம்வழுதி, கீதா ஜீவன், சிறுசேமிப்பு துறை துணைத் தலைவர் ரகுமான்கான், சமூகநலவாரிய தலைவர் கவிஞர் சல்மா, மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், எம்.பி.க்கள் ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, மேல்-சபை வேட்பாளர் ச.தங்கவேல், திருப்பூர் அல்தாப், இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், அப்துல்ரகுமான் எம்.பி., பாஷித் எம்.எல்.ஏ., அபுபக்கர், கே.எம்.நிஜாமுதீன், இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு பிரிவு மாநில தலைவர் தாவூத் மியாகான், தேசிய லீக் பஷீர் அகமது, லியாகத் அலிகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


ஜெயலலிதா மரியாதை

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று காயிதேமில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், சுலோச்சனா சம்பத், பொள்ளாச்சி ஜெயராமன், பி.எச்.பாண்டியன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் அன்வர்ராஜா, மாவட்ட நிர்வாகிகள் கவிஞர் வீரைகறீம், முகம்மதலி ஜின்னா, சப்தர் அலி, இஸ்மாயில்கனி, பதர்சயீத் எம்.எல்.ஏ., வரகூர் அருணாசலம், மனோஜ் பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு, செந்தமிழன், கோ.அரி, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.எம்.டி.ரவீந்திரஜெயன், பெரும்பாக்கம் ராஜசேகர், வாலாஜாபாத் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், ஜே.எம்.ஆருண் எம்.பி., எஸ்.எம்.ஏ.அகமது அலி, எஸ்.எம்.இக்பால், ஆர்.தாமோதரன், சதாசிவலிங்கம், வேலுத்தேவர்,

வைகோ, ஜி.கே.மணி

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சீமா பஷீர், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தமிழரசு எம்.எல்.ஏ., இந்திய தேசிய லீக் மாநில தலைவர் இனாயதுல்லா, ஜகிருதீன் அகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் சு.பார்த்தசாரதி, வன்னியர் கூட்டமைப்பு சி.என்.ராமமூர்த்தி, அன்புராஜ், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் உள்பட ஏராளமானவர்கள் காயிதேமில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

Share this