Breaking News

துபையில் நடைபெற்ற மாபெரும் 7 ஆம் ஆண்டு திருக்குர்ஆன் மாநாடு

நிர்வாகி
0
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - துபை மண்டலத்தின் சார்பாக கடந்த 06-08-2010 வெள்ளிக்கிழமை மாபெரும் திருக்குர்ஆன் மாநாடு நடைபெற்றது. துபை மண்டலத்தின் சார்பாக புனித ரமலானை வரவேற்கும் முகமாக ஒவ்வோர் ஆண்டும் திருக்குர்ஆன் மாநாடு நடத்துவது வழக்கம்.


அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் ஜுமைரா ஷைய்கா ஹிந்த் பின்த் மக்தூம் ஸ்போர்ட்ஸ் ஹாலில் (ஜுமைரா போஸ்ட் ஆபீஸ் பின்புறம்) மாலை ஐந்து மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு மண்டல துணைத்தலைவர் முஹம்மது ரபீக் தலைமை வகித்தார்.

அபுதாபி மண்டல தலைவர் முஹம்மது ஷேக் வெளிநாட்டு வாழ் முஸ்லிம்கள் எவ்வாறு இருக்கவேண்டும்'? என்ற தலைப்பிலும் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் மௌலவி. கே.எம்.அப்துன் நாசிர் 'திருக்குர்ஆன் தந்த ரமலான்'என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

மக்ரிப் தொழுகைக்குப்பின்னர் நடைபெற்ற இரண்டாம் அமர்வில் மாநில துணைத்தலைவர் மௌலவி.எம்.ஐ.சுலைமான் அவர்கள் 'திருக்குர்ஆன் ஏற்படுத்திய புரட்சி' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனைத்து தலைமை நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துபை மண்டலத்தின் அனைத்து கிளைகளிலிருந்தும் கிளை நிர்வாகிகள் வாகன வசதிகளை சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். பெண்களுக்கு தனி இட வசதி செய்து கொடுக்கப்பட்டு 20 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அமீரகத்தின் அனைத்து மண்டலங்களிலிருந்தும் பெருந்திரளான அளவில் மக்கள் கலந்து கொண்டனர்.மண்டல துணைசெயலாளர் இஸ்மாயில் தலைமையில் தொண்டரணியினர் சிறந்த முறையில் களப்பணி செய்தனர்.

மண்டல செயலாளர் முஹம்மது நாசர் MISC அவர்களின் நன்றியுரையுடன் இரவு 09.00 மணிக்கு மாநாடு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரின் செயல்களுக்கும் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக!

Share this