மறைந்த அப்துல் கப்பார் இ.யூ. முஸ்லிம் லீக்கிற்க்கு ஈடு செய்ய முடியாத ஈழப்பாகும் என தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இரங்கல்
கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னாள் தலைவர் , மாவட்ட கொளரவ ஆலோசகர் லால்பேட்டை எஸ்.ஏ. அப்துல் கப்பார் அவர்கள் - 01/10/2020 -இன்று மாலை 4.30 - மணிக்கு காலமானார்.
மறைந்த அப்துல் கப்பார் அவர்கள் 16 ஆண்டுகள் கடலூர் மாவட்ட இ.யூ.முஸ்லிம் லீக் தலைவராக சிறப்பாக பணியாற்றிய காலத்தில் மங்கலம்பேட்டை நகரிலும், பண்ருட்டி நகரிலும் இ.யூ.முஸ்லிம் லீக் மாவட்ட மாநாடுகளை கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கினைந்து சிறப்புடன் நடத்தியவர், கள்ளக்குறிச்சி நகரில் கடலூர் மாவட்டமும், விழுப்புரம் மாவட்டமும் சேர்ந்து நடத்திய மாவட்ட மாநாடு சிறப்பாக நடைபெறவும் அரும்பணியாற்றியுள்ளார். இவர் தன் இளம் வயதிலேயே லால்பேட்டை நூருல் இஸ்லாம் இளைஞர் மன்றம், காயிதே மில்லத் படிப்பகம், முஸ்லிம் இளைஞர் மன்றம் ஆகியவற்றின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார், லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் பொருளாளராகவும் சிறப்புடன் சேவையாற்றியுள்ளார். இளம் வயதிலிருந்து மகத்தான சேவையாற்றிய இவருக்கு திருநெல்வேலியில் நடைப்பெற்ற இ.யூ. முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களால் காயிதே மில்லத் விருது வழங்கப்பட்டது. இவரின் மறைவு தாய்ச்சபை இ.யூ. முஸ்லிம் லீக்கிற்க்கு ஈடு செய்ய முடியாத ஈழப்பாகும் என தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.அபூபக்கர் எம்.எல்.ஏ, மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.சாஜஹான், முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, மாநில துணைத் தலைவர் தளபதி ஷஃபீகுர் ரஹ்மான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags: லால்பேட்டை