Breaking News

உ.பி. ஹத்ராஸ் கூட்டு பலாத்கார கொடூர சம்பவம் கண்டித்து இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0

உ.பி. ஹத்ராஸ் கூட்டு பலாத்கார கொடூர சம்பவம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., பிரியங்கா காந்தி தாக்குதலை கண்டித்து இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் தமிழகத்தில் அக்.10ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. அறிக்கை அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் 05.10.2020 அன்று தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் உ.பி. மாநிலம் ஹத்ராஸில் தலித் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இச்சம்பவத்திற்கு நீதி கேட்க சென்ற இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை உ.பி. அரசு காவல்துறையினர் தாக்கியதை கண்டித்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இவ்வார்பாட்டத்தை 10.10.2020 சனிக்கிழமை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்திட அனைத்து மாவட்ட தலைவர், செயலாளர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

மத்திய பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது. நம் எதிர்ப்பை பாராளுமன்ற, சட்டமன்றங்கள், மக்கள் மன்றங்களிலும் பா.ஜ.க. அரசை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றோம்.

10.10.2020 அன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில, மாவட்ட, நகர, பிரைமரி நிர்வாகிகள், முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன், மகளிர் அணி, கேரள முஸ்லிம் கலாச்சார மையம் (கே.எம்.சி.சி) உள்ளிட்ட அணிகளின் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்று நம் எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். வஸ்ஸலாம் தங்கள் அன்புள்ள,

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ.,

மாநில பொதுச்செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Tags: செய்திகள்

Share this