Breaking News

குழந்தைகள் நலம் காப்போம் விழிப்புணர்வு பிரச்சாரம் இரண்டாம் நிகழ்வு

நிர்வாகி
0

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் நடத்தப்படட்டு வரும் குழந்தைகள் நலம் காப்போம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் இரண்டாம் நிகழ்வு இன்று 19-12-2020 ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு லால்பேட்டை பனேசா தைக்கால் ஜும்மா பள்ளிவாசல் பெண்கள் மத்ரஸா மண்டபத்தில் பள்ளியின் முத்தவல்லி அல்ஹாஜ் O.M. சபீர் அஹமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மவ்லானா மவ்லவி S. முஹம்மது அலி மன்பயீ, ஹள்ரத், அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்

இமாம் மவ்லவி, ஹாபிழ் A. மாசுமுல்லாஹ் மன்பயீ அவர்கள் தொடக்க உரை நிகழ்த்தினார்கள்.

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆலிம் பெருமக்கள், ஜமாஅத் நிர்வாகிகள், பொதுமக்கள், மக்தப் மாணவர்கள் , மற்றும் பெரும் திரளாக பெண்கள் கலந்துக் கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this