லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழு நடைபெற்றது.
லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழு கூட்டம் நகர ஜமாஅத்துல் சபையின் தலைவர் மவ்லானா மவ்லவி ஹாபிழ் ஷைகுல் ஜாமிஆ A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமையில், ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் மூத்த பேராசிரியர், ஷைகுல் ஹதீஸ் மவ்லானா மவ்லவி A. E. M. அப்துர் ரஹ்மான் ஹள்ரத் அவர்கள் முன்னிலையில் 5 - 01 - 2021 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் நிர்வாக சபைக்கு ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இன்ஷா அல்லாஹ் வரும் 15-1-2021 ( ஜமாதுல் ஆகிர் பிறை 1) முதல் நடைப்பெற இருக்கும்
புனித மிகு புகாரி ஷரீஃப் மஜ்லிஸை அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகர ஜமாஅத்துல் உலமா சபையின் துணை செயலாளராக மவ்லவி J. நூருஸ் ஸலாம் தேர்வு செய்யப்பட்டார்.
இன்ஷா அல்லாஹ் விரைவில் நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் பெண்கள் இஜ்திமா நடத்துவது. போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இக்கூட்டத்தில் ஜாமிஆ மன்பஉல் அன்வாரில் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமான ஆலிம் பெருமக்கள் கலந்துக் கொண்டனர்
Tags: லால்பேட்டை