Breaking News

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.அப்துல் ரஹ்மான் வாழ்க்கை குறிப்பு

நிர்வாகி
1

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சிதம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.அப்துல் ரஹ்மான் வாழ்க்கை குறிப்பு:

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான்-மஹதிய்யா பேகம் தம்பதிகளுக்கு மகனாக எஸ்.அப்துல் ரஹ்மான் 07.07.1979 அன்று பிறந்தார்.

ஆன்மீக செல்வர்களான மெளலானா அப்துர் ரஹ்மான் நக் ஷ பந்தி, மௌலானா அப்துல் பாஸித் குடும்பத்தை சேர்ந்தவர்.

இவருக்கு ரோஸ்னா பர்வீன் என்ற மனைவியும்,ஷஃபீக்கா பர்வீன், ஹாஜரா என்ற இரு மகள்களும்,முஹம்மத் என்கிற மகனும், அஹமது,முஹம்மது இஸ்மாயில் என்ற இரு சகோதரர்களும் உள்ளனர்.

படிப்பு:

பள்ளிப் படிப்பை லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக திறந்த வெளி நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் பி.ஏ., (அரசியல் மற்றும் அறிவியல்) படித்தார். கோட்டக்குப்பம் அல் ஜாமிஅதுர் ரப்பானிய்யா அரபுக் கல்லூரியில் ஏழாண்டு மார்க்க மற்றும் கணினி படிப்பை முடித்தார்.

பொதுப்பணி:

1991-ம் ஆண்டு முஜாஹிதேமில்லத் சிறுவர் மன்றத்தை அன்றைய மாநிலச் செயலாளரும் இன்றைய தேசியத் தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப் அவர்களைக் கொண்டு தாய்ச் சபை கொடியேற்ற வைத்து துவக்கினார்.

லால்பேட்டை ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றத்தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, லால்பேட்டை காயிதேமில்லத் இளைஞர் மன்றம், முபாரக் இஸ்லாமிய இளைஞர் நற்பணி செயலகம் போன்ற சங்கங்களில் அங்கம் வகித்து ஊர் பொதுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

அய்மான் சங்கம் என்ற பொது நல அமைப்பு மூலம் தமிழகத்தில் பல ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெற உதவியவர்..

வசதியற்றவர்களின் மருத்துவம் உதவி, எளிய மக்கள் தொழில் தொடங்க பொருளாதார உதவி என் சாதி மதம் பார்க்காமல் உதவியவர்..

அரசியல் பணி:

மக்காவில் பணியாற்றிய லால்பேட்டை மார்க்க அறிஞர் மௌலானா அப்துர் ரஹ்மான் நக் ஷ பந்தி, லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முதல் தலைவர் மௌலானா அப்துல் பாஸித், மௌலானா அப்துல் முக்னி ஸஜ்தானி, லால்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லி எஸ்.எஸ்.அப்துல் ஹமீது ஆகியோர் இவரின் பாட்டனார்களாவர், முஸ்லிம் லீக் குடும்பத்தில் பிறந்த இவர் பிறவி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரானார்.

மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் மறைவுக்குப் பின்1999-ம் ஆண்டு முஸ்லிம் லீக் மாணவர் அணியாக விளங்கும் எம்.எஸ்.எஃப் மண்டல மாநாட்டை சிறப்புற நடத்தினார்.

2008 ஆம் ஆண்டில் மாநில மாநில மாணவர் அணி (எம்.எஸ்.எஃப்) அமைப்பாளராகவும், தொடர்ந்து முஸ்லிம் லீகின் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாடு அமைப்பான காயிதே மில்லத் பேரவையில் பொருளாளராகவும், கல்வி மேம்பாடு, சமூக நலன் உள்ளிட்ட நலக் காரியங்களில் ஈடுபட்டு வரும் அய்மான் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் திகழும் இவர் இந்தியயூனியன் முஸ்லிம் லீகின் மாவட்ட,மாநில-மண்டல மாநாடுகளின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

தெரிந்த மொழிகள்:

தமிழ், ஆங்கிலம், மலையாளம், உர்தூ, ஹிந்தி, அரபி.

சென்ற நாடுகள்:

ஐக்கிய அரபு அமீரகம்,சவூதி அரேபியா.

சமூகப்பணிகள்:

இயற்கை பேரிடர் காலங்களில் உதவி செய்யும் பழக்கமுடையவர். சென்ற ஆண்டு கொரோனா பெருந் தொற்றால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப் வேண்டுகோளுக்கிணங்க வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை சமயம் கடந்து அவர்களை மீட்டு, முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ மற்றும் நவாஸ் கனி எம்.பி ஆகியோரது ஒத்துழைப்பால் 5 தனி விமானங்கள் மூலம் அமீரக காயிதேமில்லத் பேரவை ஏற்பாட்டில் தாயகம் கொண்டு வந்து சேர்த்தார்.

லட்சியம்:

சாதி-இன-மதங்களை கடந்த அனைவருக்கும் இருக்க இடம், குடிநீர், மின்சாரம் பெற்று சுகாதாரத்தோடு வாழ வேண்டும் என்பதே இவரின் லட்சியமாகும். இதை செயல்படுத்தும் விதத்தில் மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை ஏற்பாடு செய்து துணை நின்றவர்.

சமூக நல்லிணக்கம் தழைக்க நாளும் உழைத்து வருகின்றார். ஒழுக்கத்தோடு கூடிய கல்வியை அனைவரும் பெற்று உயரிய சமுதாயத்தை உருவாக்குவதே இவரின் லட்சியமாகும்.

Tags: லால்பேட்டை

Share this

1 Comments