Breaking News

லால்பேட்டையில் வீடுகளில் ஈகைத் திருநாள் சிறப்பு தொழுகை

நிர்வாகி
0

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈகைத் திருநாள் ரமலான் பெருநாள் இன்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மசூதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம்.ஆனால் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதனால் இன்று கடலூர் மாவட்டத்தில் மசூதிகள் எதுவும் திறக்கப்படவில்லை. காட்டுமன்னார்குடி, லால்பேட்டை,ஆயங்குடி ,கொள்ளுமேடு ,எள்ளேரி ,மானியம் ஆடூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகள் மூடப்பட்டு தொழுகை எதுவும் நடைபெறவில்லை.இதையடுத்து முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்திக் கொண்டனர். வழக்கமாக தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பெருநாள் வாழ்த்து கூறுவது வழக்கம்.ஆனால் நோய்த்தொற்று பரவலால் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

இது தவிர செல்போன் மூலமாகவும், வாட்ஸ்- அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பெருநாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this