Breaking News

கத்தார் MKP சார்பில் இணையவழியில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி..!

நிர்வாகி
0
மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பாக புலம்பெயர் தமிழர் வாரியம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வருக்கு இணைய வழி "நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி" மற்றும் வாரியத்தின் பயன்பாடுகள் குறித்து விளக்கும் கருத்தரங்கம் காணொளி மூலம் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசீன் தலைமை தாங்கினார், தலைமை செயற்குழு உறுப்பினர் உத்தமபாளையம் உவைஸ், மண்டல பொருளாளர் நிசார் அஹமது மற்றும் மண்டல துணைச் செயலாளர்கள் சிதம்பரம் நூர், பரங்கிப்பேட்டை ரஜ்ஜாக், பாரூக், திருச்சி நசீர் பாஷா, மேலப்பாளையம் பத்தாஹ், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் ஜூபைர், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல துணைச் செயலாளர் கருப்பூர் உபைஸ் முன்னிலை வகித்தனர்.
தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹுசைன் தொகுப்புரை வழங்கினார், கத்தார் மண்டல பொருளாளர் நிசார் அஹமது வரவேற்புரை நிகழ்த்த நிகழ்ச்சி ஆரம்பமானது.
சிறப்பு அழைப்பாளர்களாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி திரு.K.S.மஸ்தான், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷிது மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா. நாசர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்,
தோழமை கட்சியின் சார்பில் கத்தார் பன்னாட்டு திமுக செயலாளர் கத்தார் ப.அப்துல் ரஷிது, கத்தார் காயிதே மில்லத் பேரவை தலைவர் கடலூர் முஹம்மது முஸ்தஃபா, கத்தார் தாய்மண் கலை இலக்கிய பேரவை செயலாளர் சித்தீக் மைதீன், ஐக்கிய தமிழ் சங்கம்(UTF) ஒருங்கிணைப்பாளர் கடையநல்லூர் அப்துல் நாசர், கத்தார் இந்தியா சோசியல் பொதுச் செயலாளர் பன்மொழி பசீர் அஹமது, கத்தார் சகாபாக்கள் நூலக செயலாளர் தஸ்தகீர் சுலைமான் தமிழ் சங்க முன்னாள் தலைவர் விஜயன் பாபுராஜன், ICC முன்னாள் தலைவர் திருமதி மிலன் அருன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் கத்தார், குவைத், சவுதி, மலேசியா ஆகிய நாடுகளிலுருந்து பலர் கலந்து கொண்டு பல கோரிக்கைகளை மாண்புமிகு அமைச்சர் முன் வைத்தனர் அதற்கு தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என மாண்புமிகு அமைச்சர் உறுதியளித்தார். நிகழ்ச்சியின் நிறைவாக மண்டல துணைச் செயலாளர் சிதம்பரம் நூர் முகம்மது நன்றியுரை கூற நிகழ்ச்சி நிரைவுப்பெற்றது.

Tags: உலக செய்திகள்

Share this