Breaking News

லால்பேட்டை பேரூராட்சி வேட்பாளர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.!

நிர்வாகி
2

 


*லால்பேட்டை_அரசியல்* 


லால்பேட்டை பேரூராட்சி வேட்பாளர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.!


1. உங்களுக்கு கிடைக்க இருக்கும் பதவி ஒரு பொதுநலம் சார்ந்த அமானிதம், ஆகையால் உங்களால் இறைவனுக்கு பயந்து நீதமான முறையில் இருக்க முடியுமா என்று முதலில் யோசனை செய்துகொள்ளுங்கள்.


2. நீங்கள் எந்தக்கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் தலைமைக்குக் கட்டுப்பட்டோ , சுயேட்ச்சையாக இருந்தால் சக வார்டு உறுப்பினருக்கோ அல்லது அதிகாரிகளின் ஊழலுக்கோ கட்டுப்படாமல் நீதமான முறையில் மக்களுக்காக இறைவனுக்கு பயந்து நடக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.


3. தேர்தலுக்குப் போட்டியிட்டு செலவு செய்த பணத்தை வெற்றி பெற்ற பின் பேரூராட்சி நிதியிலிருந்து அதிகாரிகளின் உதவியுடன் எடுத்துவிடலாம் என்று பகல் கனவு காணவேண்டாம்.


4. இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் இனி நமது ஊர் பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டு வரவு செலவு கணக்கும் தனித் தனியாகக் கேட்கப்படும். அதை RTI தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சரிபார்க்கப் படும்.


5. நீங்கள் ஊழல் அல்லது அதற்கு துணை போனது தெரிந்தால் உங்கள் முழு விபரமும் மாநில லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு துறைக்கு அனுப்பப்படும். அதை பொது மக்களுக்குத் தெரியும் படி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும்‌.


6. நமது லால்பேட்டையில் அறப்போர் இயக்கத்தின் உதவியுடன் (அ) கிளை உருவாக்கி சாலைகள், வடிகால் போன்ற எந்த நலத் திட்டங்கள் வந்தாலும் பொதுமக்கள் சார்பாக உங்கள் அனைவரையும் உரிமையுடன் கேள்வி கேட்கப்படும்.


7. லால்பேட்டை பேரூராட்சி என்று அனைத்து சமூக வலைத்தளங்களில் குரூப்(குழு) உருவாக்கி வார்டு உறுப்பினர் அனைவரையும் அதில் சேர்த்து இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பாக , ஊர் சார்ந்த அனைத்து கேள்விகளும் கேட்கப்படும்.


8. இனிவரும் காலங்களில் இதுவரை கள்ளா கட்டியதுபோல் கட்ட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


குறிப்பு: 


உங்கள் வேட்பு மனுவை திரும்ப பெற உங்களுக்கு (07-02-22)  திங்கட்கிழமை வரை நேரம் உள்ளது.


இவண்..லால்பேட்டை நண்பர்கள் 

Tags: லால்பேட்டை

Share this

2 Comments

  1. மிகவும் முக்கியமானது, வரவேற்க்கதக்கது

    பதிலளிநீக்கு
  2. மிகவும் .......வரேவேற்கே வேண்டிய சட்டம்.மனதார வரேவேற்கின்றேன். அறப்போர் இயக்கத்திற்கு வல்லைமை வேண்டி இறைவனிடம் துஆ செய்வோம்.
    அல்ஹம்துலில்லாஹ்

    பதிலளிநீக்கு