Breaking News

அய்மான் சங்கத்தின் இஃப்தார் நிகழ்ச்சி

நிர்வாகி
1

 



 அய்மான் சங்கத்தின் இஃப்தார் நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் பிறை 17 பத்ரு ஸஹாபாக்களின் நினைவு நாளன்று மிக சிறப்பாக நடைபெறும் அதே போன்று இந்த வருடமும்  17/04/2022 ஞாயிறு கிழமை அன்று மாலை 6:00 மணியளவில் அபுதாபி ஜெய்தூன் உணவகத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர், கீழை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் தலைமை வகித்தார்.


 இந்த நிகழ்ச்சிக்கு  அய்மான் சங்கத்தின் நிர்வாக செயலாளர்  ஆடுதுறை S.முஹம்மது அப்துல் காதர் வரவேற்பு வழங்கினார்.


அய்மான் சங்கப் பொருளாளர் மௌலவி A. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் அய்மான் சங்கத்தின் மார்க்கத் துறை  செயலாளர்  மெளலவி S. M. B ஹீஸைன் மக்கி மஹ்ழரி அவர்கள் பத்ரு சஹாபாக்களின் வரலாற்று சுருக்கத்தை நிகழ்த்தினார்கள் 


 அல் கிஸஸ் பழைய மர்கஸ் மஸ்ஜிதின் இமாம் அல் ஹாபில் அஹமத் மதீனா அவர்கள் இஃப்தார் துஆ செய்தார்கள் 


அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை A.ஷாஹுல் ஹமீது ஹாஜியார் அய்மான் சங்கப் பணிகளைப் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.


 திருச்சி அய்மான் மகளிர் மற்றும் கலைக் கல்லூரியின் செயலாளர் ஹபீபுல்லாஹ் அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.


 அபுதாபி தமிழ் மக்கள் மன்றத்தின் தலைவர் திரு சிவகுமார் அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்


 அல் அயின்  இந்தியன் சோசியல் சென்டர் (ISC) தலைவர் கீழக்கரை முஸ்தபா முபாரக் அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.


 அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் (IIC)  பொருளாளர் ஜனாப் அபூபக்கர் அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்


 துபாய் ஈமான் சங்கத்தின் ஊடக செயலாளர் சமீர் அலி அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்


 அமீரக காயிதே மில்லத் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் பரக்கத் அலி அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள் 


அய்மான் சங்கத்தின் பொருளாளர் மௌலவி A. முகமது அப்பாஸ் மிஸ்பாஹி அவர்கள் அபுதாபி இந்தியன் ஸ்கூல் பேராசிரியர் அலாவுதீன் அவர்களுக்கு பொன்னாடை அனுவித்து கௌரவித்தார்கள்.


 அய்மான் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு  அல் அயின்  இந்தியன் சோசியல் சென்டர் (ISC) தலைவர் கீழக்கரை முஸ்தபா முபாரக் அவர்கள் பொன்னாடை அனுவித்து கௌரவித்தார்கள்.


 அய்மான் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கீழக்கரை செய்யது முஹம்மது ஃபாசில் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.


நிகழ்ச்சி துஆவுடன் நிறைவு பெற்றது 


 இந்த நிகழ்ச்சியில், இந்திய முஸ்லிம் பேரவை , அபுதாபி ஜமாத்துல் உலமா சபை, அபுதாபி மௌலிது கமிட்டி, அபுதாபி லால்பேட்டை ஜமாத் , அபுதாபி தளபதி பேரவை,அமீரக காயிதே மில்லத் பேரவை, துபாய் ஈமான், SDPI, அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


 நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்மான் சங்கத்தின் துணைத் தலைவர் ஒய். எம். அப்துல்லாஹ், அய்மான் சங்கத்தின் துணைத் தலைவர் கிருஷ்ணா ஸ்வீட்  Fபரீத், பைத்துல் மால் பொது செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன், நிர்வாக செயற்குழு உறுப்பினர் ஹரிஷ், நிர்வாக செயற்குழு உறுப்பினர் அஜ்மல் தாஹிர்,அய்மான் சங்க மக்கள் தொடர்புச் செயலாளர் தேவிப்பட்டிணம் ஹாஜா முபினுத்தீன்,உள்ளிட்டோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.



Tags: உலக செய்திகள்

Share this

1 Comments

  1. உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்
    IUML DMK SDPI ஒரே மேடையில் சிறப்பு

    பதிலளிநீக்கு