லால்பேட்டை துபாய் ஜமாத்திற்கு மாண்பாளர் விருது
லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லால்பேட்டை துபாய் ஜமாத்திற்கு பள்ளி வளர்ச்சிக்கு உதவிய மாண்பாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் திருமுருகன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் M.J பத்தஹூத்தீன் ஆகியோர் இவ்விருதை வழங்கி பள்ளி வளர்ச்சிக்கு உதவியதற்கும், பொருளாதாரம் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்ததற்கும் லால்பேட்டை துபாய் ஜமாத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
ஜமாத் முன்னாள் செயலாளர் S.H.ஹாஜா மைதீன், ஜமாத் முன்னாள் துணைத்தலைவர் M.T முஹம்மது அஸ்ரப் ஆகியோர் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்கள்.
லால்பேட்டை துபாய் ஜமாத்தின் செயலாளர் Z.முஹம்மது பயாஜ், முன்னாள் தலைவர்கள் S.M அனீசூர்ரஹ்மான், H.முஹம்மது பஷீர், மு.துணை செயலாளர் S.M முஹம்மது அனஸ் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.
பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் A.R மர்ஜூக் மற்றும் M.A முஃபித் அஹ்மத் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
Tags: லால்பேட்டை