மதரஸா தாருல்ஹுப்பாஜ் 3 ஆம் ஆண்டு விழா ..!
லால்பேட்டை ஆதம் மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்ற மதரஸா தாருல்ஹுப்பாஜ் 3 ஆம் ஆண்டு விழா நேற்று 09/02/2024 வெள்ளி கிழமை மாலை நடைபெற்றது.
ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர் மவ்லானா ஏ.நூருல் அமீன் ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஜாமிஆவின் தலைவர் ஏ.எம். எஃப் முஹம்மது சாதிக், செயலாளர் கே.ஏ.அமானுல்லா, பொருளாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, மஸ்ஜித் ஆதம் முத்தவல்லி எம்.மன்சூர், பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது ஹாரிஸ், துணை தலைவர் அன்வர் சதாத், ஆதம் மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லி ஒ.பி.முஹம்மது ஹசன்,பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ் உரிமையாளர் முஹம்மது சுஹைபு, மற்றும் மதரஸா தாருல்ஹுப்பாஜ் நிர்வாக சபை உறுப்பினர்களான எஸ்.ஹெச். அப்துஸ் சமது, எஸ்.இ.அப்துல் வஹாப், மவ்லானா எம்.ஏ.ஹாஜா முயீனுதீன், எஸ்.எஸ். சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதரஸா உஸ்தாத் மவ்லானா மவ்லவி ஏ.ஹெச். பசீஹுதீன் ஹசனி வரவேற்புரை வழங்கினார்.
மவ்லானா மவ்லவி எம்.ஓய்.முஹம்மது அன்சாரி ஹழ்ரத், மவ்லானா மவ்லவி ஹாபிழ் எம்.ஏ.ரபீக் அஹமது ஹசனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஜாமிஆவின் துணை முதல்வர் மவ்லானா மவ்லவி எஸ்.ஏ. சைபுல்லா ஹழ்ரத், சிங்கப்பூர் பெங்கூலன் மஸ்ஜித் இமாம் எஸ்.ஏ.கலீல் அஹமது ஹசனி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மஸ்ஜித் இமாம் எம்.முஹம்மது இர்ஷாத் நன்றி கூறினார்.
Tags: லால்பேட்டை